google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, November 19, 2013

அதிகாரம் 118 : கண்விதுப்பழிதல்


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. [118:10]

விளக்கக் குறள் :
முரசாய்ப் பறைசாற்றும் கண்ணிருந்து செய்தி
அறிந்துகொள்வ(து) ஊரார்க்(கு) எளிது

Wednesday, November 13, 2013

அதிகாரம் 51 : தெரிந்து தெளிதல்


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் [51:05]

விளக்கக் குறள் :
பெருமை சிறுமையின் தன்மையைக் காட்டும்
உரைக்கல்லாம் செய்யும் செயல்

Tuesday, November 12, 2013

அதிகாரம் 50 : இடனறிதல்


சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும் [50:08]


விளக்கக் குறள் :
சிறுபடை என்றாலும் ஏற்றஇடம் வாய்த்தால்
பெரும்படையை வீழ்த்தி விடும்

Friday, February 8, 2013

அதிகாரம் 046 : சிற்றினம் சேராமை




நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
[46:02]

விளக்கக் குறள் :

சேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்
சார்ந்தஇனம் காட்டும் அறிவு

Monday, January 7, 2013

அதிகாரம் 095 : மருந்து


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். [95:08]



விளக்கக் குறள் :
குறிப்புணர்ந்து காரணம் ஆராய்ந்து தீர்க்கும்
முறையறிந்து செய்தல் சிறப்பு

Friday, September 28, 2012

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். [112:06]

விளக்கக் குறள் :

நிறைமதியும் பெண்முகமும் மாற்றம் அறியா(து)
உறைவிடத் துள்குழம்பும் மீன்

Monday, June 18, 2012

அதிகாரம் 018 : வெஃகாமை [ பிறன்பொருள்மேல் ஆசை கொள்ளாமை ]


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் [18:01]

விளக்கக் குறள் :
நேர்மையின்றி மாற்றான் பொருள்கவரப் பார்ப்போர்
குடிகெட்டுக் குற்றம் வரும்