google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Friday, September 28, 2012

அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். [112:06]

விளக்கக் குறள் :

நிறைமதியும் பெண்முகமும் மாற்றம் அறியா(து)
உறைவிடத் துள்குழம்பும் மீன்

Monday, June 18, 2012

அதிகாரம் 018 : வெஃகாமை [ பிறன்பொருள்மேல் ஆசை கொள்ளாமை ]


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும் [18:01]

விளக்கக் குறள் :
நேர்மையின்றி மாற்றான் பொருள்கவரப் பார்ப்போர்
குடிகெட்டுக் குற்றம் வரும்

Thursday, June 14, 2012

அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை [06:03]


விளக்கக் குறள் :
மனைவியின் நற்பண்பால் வாழ்க்கை சிறக்கும்;
அமையா(து) அவளின்றி வாழ்வு

Thursday, February 16, 2012

அதிகாரம் : 131: புலவி [ காதலரின் ஊடல் ]

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். [131:03]
விளக்கக் குறள் :
வாடல்தான் கூட்டிவிடும்; கூடாமல் ஓடிவிடும்
ஊடலுற்ற அன்பர் செயல்
வெறுத்தோரைச் சேராமல் போவது; துன்புற்(று)
இருப்போரைத் துன்புறுத்தல் போன்று
ஊடல்தான் கொண்டோரை மென்மேலும் துன்புறுத்தும்
கூடாமல் விட்டு விடல்

Wednesday, January 18, 2012

அதிகாரம் : 16 பொறைஉடைமை [ பொறுமை ]

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும் [16:04]

விளக்கக் குறள் :
பொறுமையை நீங்காமல் போற்றி இருப்போர்ப்
பெருமையைப் போற்றும் உலகு