google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, November 29, 2011

அதிகாரம் 088 : பகைத்திறன் தெரிதல்


வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]


விளக்கக் குறள் :

வழியறிந்து தன்வலியால் தற்காப்போர் முன்னால்

அழியும் பகையின் திமிர்

5 comments:

  1. அருமை ...விளக்கமும் படமும்

    ReplyDelete
  2. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]

    -- இதில் முதலடி நாச்சீரும், இரண்டாம் அடி முச்சீரும் கொண்டு குறள் வெண்பா இலக்கணம் தழுவி நிற்க ஏன் சீர் இலக்கணம் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது உம்மால் எனப்து வருந்தச்செய்கிறது.. இறுதிச்சீர் ஓரசைச்சீராக அமைவது தான் குறலின் சிறப்பு... இலக்கணம் அறிந்து செய்தால் சிறப்பு பெறலாம்... இல்லையேல் தமிழுக்கு அணிசெய்யும் அணி இலக்கணம் மறந்து நாம் தமிழுக்கு அணிசெய்தல் இயலாதது...!!!

    ReplyDelete
  3. நன்றி சகோதரி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ///வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]/////

    வாழ்க கவின் முருகு ஐயா ...
    ஐயனின் குறளில் ஈற்றுச்சீரில் நான் ஒரு மாற்றமும் செய்யவில்லையே.!.

    ஈற்றுச்சீர் நாள் , மலர் என்றும் காசு ,பிறப்பு என்றும் முடியும் என்பது உலகறிந்தது . தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் ...

    கவனிக்க .. முதல்குறளே ‘உலகு’என்றே முடிகிறது .இது ஓரசை இல்லை.உலகும் , செருக்கும் ‘பிறப்பு’ என்னும் வாய்ப்பாட்டில் அமைத்திருக்கிறது ...

    ஐயன் இலக்கணம் அறிந்தே எழுதியுள்ளதை அறிந்துகொள்வோம் ஐயா ...( நீங்கள் ஐயனின் திருக்குறளைக் குற்றம் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா ????)

    ReplyDelete