திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]
-- இதில் முதலடி நாச்சீரும், இரண்டாம் அடி முச்சீரும் கொண்டு குறள் வெண்பா இலக்கணம் தழுவி நிற்க ஏன் சீர் இலக்கணம் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது உம்மால் எனப்து வருந்தச்செய்கிறது.. இறுதிச்சீர் ஓரசைச்சீராக அமைவது தான் குறலின் சிறப்பு... இலக்கணம் அறிந்து செய்தால் சிறப்பு பெறலாம்... இல்லையேல் தமிழுக்கு அணிசெய்யும் அணி இலக்கணம் மறந்து நாம் தமிழுக்கு அணிசெய்தல் இயலாதது...!!!
அருமை ...விளக்கமும் படமும்
ReplyDeleteவகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
ReplyDeleteபகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]
-- இதில் முதலடி நாச்சீரும், இரண்டாம் அடி முச்சீரும் கொண்டு குறள் வெண்பா இலக்கணம் தழுவி நிற்க ஏன் சீர் இலக்கணம் மாற்றி எழுதப்பட்டிருக்கிறது உம்மால் எனப்து வருந்தச்செய்கிறது.. இறுதிச்சீர் ஓரசைச்சீராக அமைவது தான் குறலின் சிறப்பு... இலக்கணம் அறிந்து செய்தால் சிறப்பு பெறலாம்... இல்லையேல் தமிழுக்கு அணிசெய்யும் அணி இலக்கணம் மறந்து நாம் தமிழுக்கு அணிசெய்தல் இயலாதது...!!!
நன்றி சகோதரி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete///வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
ReplyDeleteபகைவர்கண் பட்ட செருக்கு. [88:08]/////
வாழ்க கவின் முருகு ஐயா ...
ஐயனின் குறளில் ஈற்றுச்சீரில் நான் ஒரு மாற்றமும் செய்யவில்லையே.!.
ஈற்றுச்சீர் நாள் , மலர் என்றும் காசு ,பிறப்பு என்றும் முடியும் என்பது உலகறிந்தது . தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் ...
கவனிக்க .. முதல்குறளே ‘உலகு’என்றே முடிகிறது .இது ஓரசை இல்லை.உலகும் , செருக்கும் ‘பிறப்பு’ என்னும் வாய்ப்பாட்டில் அமைத்திருக்கிறது ...
ஐயன் இலக்கணம் அறிந்தே எழுதியுள்ளதை அறிந்துகொள்வோம் ஐயா ...( நீங்கள் ஐயனின் திருக்குறளைக் குற்றம் சொல்லி இருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா ????)